💁🏻♂️ தாவீதின் தாத்தாவாம்; நகோமியின் பேரனாம்; ரூத்தின் செல்லக் குழந்தையாம். அவன் யார்?
(ஓபேத் : ரூத் 4:21)
💁🏻♀️ ஓடச் சொன்னதால் ஓட்டம்; ஓடச் சொல்லாமலே ஓட்டம்; ஓட வேண்டியதால் ஓட்டம்; அவர்கள் யார்? (லோத்தின் மனைவி, ஆகார், யோசேப்பு)
💁🏻♂️ இறக்கை முளைத்த குஞ்சு கூண்டிலே தங்காதாம்; இறக்கை முளைத்ததால் வீட்டை விட்டு போனதாம்; தீட்டை தலையில் சுமந்தாளாம். அவள் யார்?
(தீனாள் : ஆதி 34:1)
💁🏻♀️ எங்க வீட்டுத் தோட்டத்தில் எக்கசக்க மரம் இருக்கு; அதன் நடுவில் உயிர் இருக்கு; அது என்ன? (ஜீவ விருட்சம்)
💁🏻♂️ இது ஒரு உயிரினம்; பழைய ஏற்பாட்டில் இது ஒருவருக்கு ship (கப்பல்) ஆகவும், புதிய ஏற்பாட்டில் ஒருவருக்கு bank ஆகவும் இருந்தது. அது என்ன? மீன்
💁🏻♀️ ஆணி வேர் இல்லா மரம்; ஆணின் பெயர் உள்ள மரம்; ஒரே நாளில் பூத்த மரம்; வாதுமை பழங்கள் காய்த்த மரம். அது என்ன? (ஆரோனின் கோல்: எண்ணா 17:8)
💁🏻♂️ IAS பட்டமும் வாங்கலாம்; IPS பட்டமும் வாங்கலாம்; அடுத்தடுத்து பட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம்; ஆனால் லேவியருக்கு மட்டுமே சொந்தமான, சுதந்தரமான பட்டம். அது என்ன? (ஆசாரியப்பட்டம்: யோசுவா 18:7)