💁🏻♂️ வாக்குதத்த செய்தியை விரும்புவதை விட வாழ்க்கைக்கேற்ற செய்தியை விரும்புங்கள்.
💁🏻♀️ நாம் எல்லோரும் செய்யும் பெரும் தவறு நம்மை விட்டுவிட்டு பிறரை திருத்த முயல்வது தான்.
💁🏻♂️ வசதியான வாழ்க்கை என்பது தவறல்ல; வசதி தான் வாழ்க்கை என்பது தான் தவறு.
💁🏻♀️ தேவனுடைய வேலையில் தேவனால், தேவனுக்காக பாடுபடுபவனே தேவ மனுஷன்.
💁🏻♂️ நீ குகையில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும், சிறு அறையில் இருந்தாலும் தேவனோடு ஐக்கியமாய் இரு.
💁🏻♀️ மனிதன் போக முடியாத இடத்திற்கு போய் திறக்க முடியாத வாசலையும் கூட திறந்து விடுகிறது ஜெபம்.
💁🏻♂️ தேவ பிள்ளைகள் தேவைகளுக்காக தேவனை தேடாமல், தேவனை தேடுவது தேவையான ஒன்று என தேடுங்கள்.
💁🏻♀️ வார்த்தைக்கு மட்டுமே வல்லமை அல்ல வஸ்திர தொங்கலுக்குமே வல்லமை தானே!
💁🏻♂️ சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கை அல்ல; சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை.
💁🏻♀️ வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்; முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் மிகச் சிறந்த தம்பதிகள்.